அசாத் சாலிக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான அறிவிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அசாத் சாலி தாக்கல் செய்த மனு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மனு மீதான விசாரணை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May also like