கொழும்பில் மேலும் மூவருக்கு டெல்டா? பரிசோதனை தீவிரம்!

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் டெல்டா தொற்றுக்கு இலக்கான 05 பேர் தவிர்ந்த அந்தப் பிரதேசத்தில் குறித்த தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்திலுள்ள 03 பேரது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப்பிரிவுப் பணிப்பாளராக டாக்டர் சஞ்ஜித் பட்டுவன்துடாவ கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

பரிசோதனை முடிவின் பின்னர் அதன் தகவலை மக்களுக்கு அறிவிக்கக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

You May also like