இன்று முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் கொவிட் தடுப்பூசி!

இன்று திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

முதியவர்கள் வைத்தியசாலைகளுக்கு வருகைத் தரும் போது, விண்ணப்ப படிவத்தை நிரப்பிக்கொண்டு வருவதுடன், தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் அவர் கோரியுள்ளார்.

You May also like