டெல்டா ஏற்பட்ட கஹத்துடுவ பகுதி நபருடன் தொடர்பிலிருந்த பலருக்கு கோவிட்!

இந்தியாவில் பரவிய டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட கொழும்பின் புறநகராகிய கஹத்துடுவ பிரதேசத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 100 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 100 பேரில் 70 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில்  4 பேருக் கோவிட் உறுதியானது.

எனினும் அவர்களுக்கு டெல்டா திரிவு ஏற்பட்டிருப்பதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

You May also like