2750 இந்தியர்கள் கொழும்பில்- அவர்களிடம் இருந்தா டெல்டா பரவியது?

கொழும்பு நகரத்தில் மாத்திரம் 2750 இந்தியர்கள் பல்வேறு நிர்மாணப் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு மாநகர சபைப் பிரிவுக்கு உட்பட்டுள்ள பிரதேசங்களில் 91 இந்தியர்கள் தொழிலில் டுபட்டிருப்பதாகவும், அவர்களில் 42 பேர், மிகப்பெரிய நிர்மாணத்துறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் இடம்பெறுகின்ற கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்த சிலருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டிருக்கின்ற நிலையில், இந்தியர்களுக்கு இத்தொற்று ஏற்பட்டிருக்கின்றதா அல்லது அவர்களிடமிருந்து தொற்று பரவியதா என்ற விசாரணை நடத்தப்படுகின்றது.

You May also like