மீண்டும் பயணத்தடையா? 05ஆம் திகதிக்குப் பின் தீர்மானம்!

நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒருமாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாகேவே இன்று நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

வருகின்ற 05ஆம் திகதிவரை நாட்டின் நிலைமையை அவதானித்து மக்கள் செயற்படக்கூடிய விதம் பற்றி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதன் பின்னரே மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

You May also like