விவசாயிகளைக் கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற சூழ்ச்சி?

விவசாயிகளைக் கொலை செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப்பிடிப்பதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தைக் கூறினார்.

இரசாயனப் பசளையை தடைவிதித்து கரிமப்பசளை பாவனைக்கு எடத்த அரசாங்கத்தின் முடிவினை ஒருபோதும் மாற்றிக்கொள்ள இடமளிக்கப்படாது. தற்போது இதற்கெதிராக ஜே்.வி.பி உள்ளிட்ட எதிரணியினர் விவசாயிகளைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். விவசாயியை கொலை செய்து அதனூடாக ஆட்சியைக் கைப்பற்றவே சூழ்ச்சி இடம்பெறுகிறது. அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் கூறினார்.

You May also like