மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி- ஏற்றுக்கொண்டார் பிரதமர்!

அந்நிய செலாவணி இருப்பில் மிகப்பெரிய சிக்கல் நிலைமை தோன்றியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது

இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் அந்நிய செலாவணி கைமாற்றல் திட்டத்தில் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக்கின்றார்.

மேற்படி சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திலேயே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அந்நிய செலாவணி இருப்பினை வைத்து வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கும், இறக்குமதி செய்வதற்குமான நெருக்கடி வருகின்ற சில மாதங்களில் தலைதூக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார் பிரதமர்.

 

You May also like