கைதிகள் விடுதலை செய்த தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம்?

சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி வழங்குகின்ற பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்வதற்கான உரிமை எவருக்கும் உண்டு என்று இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியரும், சட்டமேதையுமான பிரத்திபா மஹனாம கொழும்பில் புதன்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்படி கூறினார்.

எந்தவொரு சிறைக் கைதிக்கும் ஜனாதிபதி அரசியலமைப்பில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பினை அளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அதனை சவாலுக்குட்படுத்தி உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்வதற்கான உரிமை மக்களுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தூக்குத் தண்டனை கைதியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புபற்றி தற்போது விமர்சனம் வெளியாகி வருகின்ற நிலையிலேயே இப்படியான அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like