இலங்கை அரசாங்கம் 208 பில்லியன் நோட்டுக்களை அச்சிட்டதாக தகவல்!

இலங்கை வரலாற்றில் அதிகூடிய பணநோட்டுக்கள் நேற்று அச்சிடப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள பணப்பெறுமதி 208 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி துஷார இந்துனில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமைக்கு மத்தியில் பஸில் ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியில் அமர்த்து அழகுப்பார்க்க அரசாங்கம் துடிப்பதாகவும், இதனால் எந்த தீர்வையும் நாட்டு மக்கள் பெறப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like