எதிர்வரும் 10 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்து?

சுகாதார விதிமுறைகள் உரியமுறையில் செயற்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும்  10 வாரங்களில் நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமடையும் என  ராஜாங்க அமைச்சர்  சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

டெல்டா கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில்  கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் உயிரிழந்துள்ளதன் காரணமாக குறித்த வயது தரப்பினருக்கு தடுப்பூசி திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே நாட்டிலல் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 12 கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்மோ புள்ளே இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்பா வகை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் செயற்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும் 10 வாரங்களில் டெரல்டா வைரஸ் பரவலடைமயும் அபாயமுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.

You May also like