ரயில் வேலைநிறுத்தம் முடிந்தது!

ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் இன்று காலைமுதல் நடத்திவந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பயணச்சீட்டுக்களை சீன நிறுவனத்திற்கு இலத்திரனியல் முறைப்படி வழங்காமல் உள்ளூர் நிறுவனத்திற்கு அதற்கான முயற்சியை வழங்கும்படிகோரி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

எனினும் இன்று முற்பகலில் போக்குவரத்து அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like