கண்டியில் இருவரை சிலுவையில் அறைந்த ஆசாமி தலைமறைவு?

கண்டியில் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இருவரை சிலுவையில் அறைந்த ஆசாமி ஒருவர் பற்றிய மேலுமொரு தகவல் வெளியாகியிருக்கின்றது.

தன்னைப் பற்றி இகழ்ந்து முகநூலில் பதிவிட்ட இருவரைக் கடத்தி சிலுவைபோன்ற பலகையில் அறையும்படி உத்தரவிட்ட சிங்கள ஆசாமி தற்போது தலைமறைவாகியிருப்பதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கண்டி – திகன பிரதேசத்திற்கு அருகில் உள்ள பலகொல்ல பிரதேசத்தில் வான் ஒன்றில் இருவரைக் கடத்தி கண்டி நகருக்கு அண்மித்த பிரதேசமாகிய அம்பிட்டிய  – கால்தென்ன பிரதேசத்தில் சிலுவைபோன்று செய்துவைக்கப்பட்டிருந்த பலகையில் ஆணியடித்து அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனுடன் தொடர்புடைய பலர் இதுவரை கைதாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரதான சந்தேக நபராகிய சிங்கள ஆசாமியான வெத்தசிங்க ஆரச்சிலாகே தஷ்மந்த பெர்ணான்டோ என்பவர் தற்போது தலைமறைவாகியிருக்கின்ற நிலையில் அவர், கதிர்காமம் பிரதேசத்தில் மறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. 

குறித்த நபருக்கு பிரபல அரசியல்வாதிகளின் தொடர்பும் இருப்பதாக தெரியவருகிறது.

அவரை கைது செய்ய தற்போது விசேட அதிரடிப்படையின் 05 குழுக்கள் களத்தில் உள்ளனர்.

You May also like