மற்றுமொரு வெள்ளைவான் கடத்தல்- இலங்கையில் பரபரப்பு!

இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில் வெள்ளை வானில் வந்த கும்பலொன்று தனது கணவரை கடத்திச்சென்று கடும் தாக்குதலை நடத்திவிட்டு இடைநடுவே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றிருப்பதாக தாக்குதலுக்கு உள்ளாகிய நபரது மனைவி முறையிட்டிருக்கின்றார்.

தமிழர் ஒருவரையே இவ்வாறு கடத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த நபரை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட வான் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.

 

You May also like