பாணின் விலை 83 ரூபா? மாலுபாண் விலை 120 ரூபா?

கொழும்பு உட்பட சில இடங்களில் மாலுபாண் என்கின்ற பேக்கரி உற்பத்தியின் விலை 30 ரூபா தொடக்கம் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதேபோல பாணின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதால் பாண் ஒன்றின் விலை 70 ரூபா முதல் 83 ரூபாவரை விற்பனை செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.

ஆகவே பேக்கரி உற்பத்திகளின் விலைகளுக்கு நிர்ணய விலையை அரசாங்கம் அறிமுகஞ்செய்ய வேண்டுமெனவும் இந்த சங்கம் கூறியுள்ளது.

You May also like