இருவரை சிலுவையில் அறைந்த கண்டி ஆசாமி கைது!

கண்டி பிரதேசத்தில் இருவரை சிலுவையில் அறைந்த சிங்கள ஆசாமி இன்று வியாழக்கிழமை கைது செய்யப்ப்டடுள்ளார்.

துஷ்மந்த பெர்ணான்டோ என்ற குறித்த நபர் இன்று காலை கண்டி – பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின் கைதாகியுள்ளார்.

முகநூலில் தன்னைப்பற்றி விமர்சனம் எழுதியதாகக் கூறி பலகொல்ல பிரதேசத்தில் வைத்து இருவரை வேன் ஒன்றில் கடத்தியிருந்த இவர், கண்டி – அம்பிட்டிய பிரதேசத்திலுள்ள மலையுச்சி ஒன்றில் அவர்களை சிலுவைபோன்று செய்யப்பட்டிருந்த பலகையில் ஆணியடித்து அறைந்திருக்கின்றார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகிய அவர் இன்று காலை பொலிஸாரிடத்தில் சரணடைந்ததுடன், மேலும் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை குறித்த நபருக்கு அரசியல்செல்வாக்கும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

You May also like