இருவரை சிலுவையில் அறைந்த கண்டி ஆசாமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ (VIDEO)

இருவரை சிலுவையில் அறைந்த சிங்கள ஆசாமியான கண்டி – பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த துஷ்மந்த பெர்ணான்டோ தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் நேற்று வெளியான நிலையில் அவர் முகநூலில் பதிவொன்றை நேற்று இட்டுள்ளார்.

இரண்டு நபர்களை சிலுவையில் அறைந்த சம்பவத்தை நியாயப்படுத்தி அவர் நீண்ட விளக்கமொன்றை வழங்கியிருக்கின்றார்.

அம்பிட்டிய பிரதேசத்தில் தனது பாட்டனாரது காணியொன்றில் விகாரையொன்றை நிர்மாணித்து வரும் நிலையில் அங்கு தொழில்புரிகின்ற இளைஞர்கள் பலரும் போதைப்பொருள் பாவித்து வருவதை தாம் கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தவர்களை தாம் கண்டறிந்து இரண்டு  பொலிஸ் நிலையங்களில் முறையிட்டதன் பின்னர் அவர்கள் தனக்கு மரண அச்சறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதனிடையேதான் தாம் இரண்டு நபர்களைப் பிடித்ததாக துஷ்மந்த ஆசாமி கூறியுள்ளார்.

 

You May also like