மேலுமொரு நாடு இலங்கை மீது விதித்தது தடை!

இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களுக்கும், தென்னாபிரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும், கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்த நைஜீரியாவிற்கும் இந்த நுழைவு அனுமதிக்கப்படுவர்.

You May also like