ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு MRI பரிசோதனை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவர் அண்மையில் முழங்காலில் ஏற்பட்ட உபாதையினால் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே அவருக்கு விரைவில் எம்.ஆர்.ஐ பரிசோதனை நடத்தப்படவிருப்பதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலையிலும் அவரைச் சுற்றி 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like