இராஜாங்க அமைச்சர் ஒருவரை பதவி விலக வலியுறுத்தும் தேரர்

express pearl கப்பல் தீபரவினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித புரிதலும் இன்றி கருத்துக்களை வெளியிட்ட  இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா சட்டநடவடிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தமது பதவியில் இருந்து விலக வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

176 ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் நான்கு திமிங்கிலங்கள் உயிரிழந்தமைக்கு express pearl கப்பலில் இருந்து வெளியான நச்சு இரசாயனங்கள் காரணமென நிபுணர்கள் குழு உறுதிப்படுத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் பருவ மாற்றம் காரணமாக ஏற்பட்ட அழிவு இவை என கருத்து வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் ஒமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May also like