கொழும்பில் பிரபல ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்த குண்டர்கள்!!!

ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான  தனுஷ்க அரவிந்தவின் இல்லத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத குழு பற்றி பொலிஸாரிடத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எமது Tamil.truenews.lk இணையத்தளத்திடம்கருத்து வெளியிட்ட அவர், நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறினார்.

கொழும்பு மரதானையில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்திருக்கும் இந்தக் குழுவினர், தனது சார்ந்த ஆவணங்களைத் தேடியிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதுபற்றி விசாரணை செய்யும்படி மரதானை பொலிஸாரிடத்தில் இன்று நண்பகலில் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

You May also like