முருந்தெட்டுவே தேரருக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு!

கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த கொழும்பு நாரஹேன்பிட்டி – அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அழைப்பு கிடைத்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்யும்படி ஜனாதிபதி கோட்டாபயவினால் தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை இந்த அழைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

You May also like