ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்கும் திகதி அறிவிப்பு!

அனைத்து அரச பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி அளிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் அடுத்த வாரத்திலிருந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி அளிக்கும்படி சுகாதார மற்றும் கல்விப்பிரிவுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கிடையில் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தடுப்பூசியை அளித்துவிட கல்வி அமைச்சு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

You May also like