கொழும்பில் மற்றுமொரு நபருக்கு டெல்டா தொற்று உறுதி

இந்தியாவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு – வெல்லம்பிட்டிய – கித்தம்பஹுவ என்கிற பிரதேசத்தில் வைத்து இவர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பொறளை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஆண் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் தொழில்புரிகின்ற இடம் மற்றும் நெருக்கமாகப் பழகியவர்கள் என 20 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யபடவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை ஐந்து பேரே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைப் பிரதிப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் நேற்று கூறியமை குறிப்பிடத்தக்கது.

You May also like