இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சங்கா-மஹேல காரணம்; அர்ஜுன குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பில் 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த இலங்கை அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இரண்டாம் நிலை தலைவர்களை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஏற்படுத்தவில்லை என்றும் அவர்கள் தங்களது சாதனைகளை மாத்திரமே நிகழ்த்திவிட்டு சென்றிருப்பதாகவும் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் இயங்கும் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பெரியப்பா ஜனாதிபதியாகவும், தந்தை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த முடியாவிட்டால் வேறு எவராலும் இயலாது என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்ஷவும் தோல்வி அடைந்துள்ளார் என்றும் அர்ஜுன கூறியுள்ளார்.

 

You May also like