நாடு திரும்ப உள்ளவர்களுக்கு வந்தது புதிய கட்டளை!

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் கடந்த 30 ஆம் திகதி கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்ற போது வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்கள் முறையான பிசிஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம்” என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கோரிக்கைகள், தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் , வெளிநாட்டிலிருப்பவர்களின் வருகை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள், பிசிஆர் சோதனைகள் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள் போன்ற கொவிட் தொற்றினை தடுக்க கூடிய செயன்முறைகள் இவர்களால் ஆராயப்பட்டன .

இலங்கைக்குள் வருபவர்கள் முறையான பிசிர் பரிசோதனைகள் செய்துகொள்ளாமல் அன்ட்டிஜென் பரிசோதனைகள் அறிக்கைகளுடன் நாட்டுக்குள் உட்பிரவேசிப்பதால் கொவிட் பரம்பல் மேலும் அதிகரிக்கப்படுகிறது என்பதனால் இனிவரும் நாட்களில் அவர்கள் முறையான பிசிஆர் அறிக்கையுடனேயே நாடு திரும்ப வேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

அரசாங்கத்தினால் அங்கீகிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரமே பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்ப ஆரம்பித்துள்ளமையால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்துள்ளார் .

நன்றி – ட்ரூசிலோன்

You May also like