கோவிட் அபாய வலயமாகும் கண்டி – 15000 தொற்றாளர்கள் பாதிப்பு!

கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 15000ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 187 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மத்திய மாகாண சுகாதார சேவைத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் 15,162 தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் உள்ளனர்.

கண்டி நகர எல்லைக்குள் 74 பேருககும், உடபலாத்த பகுதியில் 23 பேரும், கலஹா பிரதேசத்தில் 21 பேரும், அக்குறணையில் 16 பேரும், பம்பரதெனியவில் 10 பேரும், ஹாரிஸ்பத்துவ பகுதியில் 06 பேரும், குண்டசாலை, யட்டிநுவர மற்றும் மெதும்பரவில் தலா 05 எனவும், கங்கவட்டகோரள, மெனிக்கின்ன, நாவலப்பிட்டிய, பஹத்ததும்பர, பாதஹேவாஹெட்ட, உடுதும்பர பகுதிகளில் தலா 03 நோயாளர்கள் என்றும் கலகெதர மற்றும் வேறு இடங்களில் 02 பேர் என நேற்று கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் இதுவரை 434 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று மாத்திரம் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

You May also like