வெள்ளை வேன் கடத்தல்:4 படைச் சிப்பாய்கள் கைது!

நுரைச்சோலை பகுதியில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 30 திகதி இராணுவ உடையை ஒத்த சீருடை அணிந்த நபர்கள் நுரைச்சோலை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில், இராணுவத்தினர் முன்னெடுத்திருந்த விசாரணைகளில் சந்தேகநபர்கள் நால்வரை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நான்கு பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

தனிப்பட்ட தகராரு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இராணுவ சட்டவிதிகளுக்கமைய சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

You May also like