பஷில்-விமல் சந்திப்பு- இனி பிரச்சினைகள் நிறைவுக்கு?

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையே இரண்டு மணித்தியால சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஷில் ராஜபக்ஷ தற்போது கொழும்பு ஷன்கரில்லா விடுதியில் தனிமைப்படுதலில் உள்ளார்.

இதனிடையில் மேற்படி சந்திப்பு கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடந்துள்ளது.

மிகவும் இரகசியமாக நடத்தப்பட்ட இச்சந்திப்பில் அமைச்சர்களான உதய கம்மன்பில தரப்பினரையும் சந்திக்க பஷில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் அரசாங்கத்திற்குள் பஷில் எதிர்ப்புகள் வரும் 8ம் திகதிக்கு முன் நிறைவடையும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like