இலங்கையில் மாலைதீவுப் பிரஜைக்கு தொற்றியது டெல்டா!

கொரோனா வைரஸின் திரிபடைந்த டெல்டா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப்பிரஜை இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில் நாட்டில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு நகரப்பிரதேசத்தையும், அதனை அண்மித்த பகுதிகளையும் சேர்ந்தவர்கள்.

 

You May also like