செப்டம்பரில் நாடு முழுமையாக திறக்கப்படும்;ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம். தொடர்ந்தும் நாட்டை முடக்கிவைத்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார சவால்கள் ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

You May also like