பிரிட்டன் தூதுவரை சந்தித்த ஹக்கீம்-சம்பந்தன் குழு புதன்கிழமை சந்திக்கும்?

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பல அரசியல் விவகாரங்கள் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று பகல் இச்சந்திப்பு நடந்தது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

You May also like