கம்மன்பிலவின் தலை இலக்கு வைக்கப்படுமா? மொட்டுக்கட்சியின் தீர்மானம் இதுதான்!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது பற்றி கட்சி கூடித்தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பு – நெலும்மாவத்தையில் உள்ள மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஜூலை 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like