இலங்கை அணி வீரர்களுக்கு 36 மணிநேர காலக்கெடு?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு, கிரிக்கெட் சபையுடன் விளையாட்டு ஒப்பந்தம் குறித்து இறுதிமுடிவை எடுப்பதற்கு 36 மணிநேர கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இல்ஙகை கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை இலங்கை அணியினர் பிரித்தானியாவிலிருந்து இன்று திங்கட்கிழமை இரவு நாடு திரும்பியதும் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இங்கிலாந்து அணியுடனான போட்டிக்குச் செல்வதற்கு முன்னராக இலங்கை கிரிக்கெட்சபையுடன் இலங்கை அணியினர், ஒப்பந்தம் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தினர்.

வீரர்களைத் தரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்ற அளவுகோல்கள் குறித்து எழுந்த பிரச்சினை இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திட்டிருந்தனர். எவ்வாறாயினும் இந்திய அணியுடனான போட்டி விரைவில் நடத்த ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like