டெல்டா அச்சறுத்தல் ஓரத்திற்கு- கண்டி தலதா பெரஹெரவை நடத்த தயாராகும் அரசு!

டெல்டா தொற்றின் அச்சறுத்தல் இலங்கையில் தலைதூக்கியுள்ள நிலையில், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையினால் நடத்தப்படுகின்ற வருடாந்த பெரஹெர வீதியுலாவினை இந்த வருடத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த வீதி பெரஹெர பேரணியில் கலந்துகொள்கின்ற நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்கின்ற பணிகளும் தற்சமயம் தலதா மாளிகை வளாகத்தில் நடத்தப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த வீதி பெரஹெர பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்வு மக்களுக்கு அனுமதிக்கப்படாமல் பொலிஸாரின் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் நடத்திமுடிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் அந்நிய செலாவணி, கோவிட் நெருக்கடி, அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மக்கள் செல்வாக்கு சரிவு போன்ற பல காரணங்களுக்கு கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் வருடாந்த வீதி பெரஹெர பேரணியை வழமைபோல நடத்தாமலிருப்பதே காரணம் என்று அநுராதபுரத்திலுள்ள பிரபல பெண் சோதிடர் அரச உயர்பீடத்திலிருந்து அங்கு அண்மையில் சென்ற ஒருவருக்கு தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதன் பின்னணியிலேயே தலதா மாளிகையின் பெரஹெர தடல்புடலாக நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் அளித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இருந்த போதிலும் புதுவருட கொரோனா கொத்தணி போன்று கண்டி பெரஹெர கொத்தணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் அரசை எச்சரித்திருக்கின்றனர்.

You May also like