இலங்கையில் பெற்றோல், டீசல் தட்டுப்பாடா?

நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் உட்பட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனினும் அந்த தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்பதை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் நாட்டின் களஞ்சியத்தில் இருப்பதாகவும், மேலதிகமாக 35000 மெற்றிக் டொன் எரிபொருள் நாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like