பிரபாகரனுக்கு ஏற்பட்டநிலை நடக்கும்-ஊடகரை அச்சுறுத்திய பொலிஸ்;சபையின் கவனத்திற்கு!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால், சுதந்திர ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு விடுக்கப்பட்ட அச்சறுத்தல் தொடர்பில் விசாரணை அவசியமென எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் இன்று வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர் தரிந்துவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்ககே ஏற்கவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது கூறினார்.

இதேவேளை  போலியான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு வெளியிட்டால் பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்றும் தரிந்து ஜயவர்தனவுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் தென்னகோன், முகநூல் ஊடாக கடந்தவாரம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like