ஆர்ப்பாட்டம் செய்தால் இனி கைது- பொலிஸார் விசேட அறிவிப்பு

பொதுமக்களை இணைத்துக்கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை செய்ய மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் இந்த அறிவித்தலை இன்று மாலை வெளியிட்டிருக்கின்றது.

கொரோனா தொற்றுப் பரவலைத்தடுப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எவ்வாறாயினும் உரப்பற்றாக்குறை போன்ற பல விடயங்களுக்காக விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்ற நிலையிலேயே இந்த தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like