பஸிலுக்காக பதவியை இராஜினாமா செய்தார் கெட்டகொட!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷவினால் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

வருகின்ற 08ஆம் திகதி பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டியுள்ள நிலையில், அவருக்கான வெற்றிடத்தை ஏற்படுத்தவே மேற்படி எம்.பி பதவியை கெட்டகொட இராஜினாமா செய்திருக்கின்றார்.

அந்த வகையில் ஜயந்த கெட்டகொடவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

You May also like