மைத்திரி அணிக்குள் பூகம்பம்- பஸில் அணி என புறம்பான பிரிவு உதயம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பிளவடைய ஆரம்பித்துவிட்டதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

குறிப்பாக பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற மீள் வருகையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரக்கட்சியிக்குள் பஸில் அணி, பஸில் எதிரணி என அணிகள் உருவாகியிருக்கின்றன.

இவற்றில், நாடாளுமன்ற உறுப்பினர்களான லசந்த அலகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் பஸில்வாதிகளாக உள்ளனர்.

மேலும், கட்சியின் பொதுச் செலயாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செலயாளர் பேராசிரியர் ரோஹண பியதாஸ உள்ளிட்ட சிலர் பஸில் எதிரணியினராக உள்ளனர்.

இந்நிலையில் பஸில் ஆதரவு அணியினர் நேற்று மாலை, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் வைத்து பலமணிநேரம் மந்திராலோசனை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு இவர்கள் முழு ஆதரவை வழங்கவும் தீர்மானித்திருக்கின்றனர்.

இந்நிலையில், விரைவில் சுதந்திரக்கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்கம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகின்றது.

You May also like