இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை எடுக்கவுள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் பிரதான வருடாந்த ஒப்பந்தம் விவகாரத்தில் பகிஷ்கரிப்பை செய்வதற்கு கிரிக்கெட் அணியின் 24 வீரர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் புதிய விளையாட்டு ஒப்பந்தம் நாளை புதன்கிழமை காலை இலங்கை கிரிக்கெட் சபையில் செய்துகொள்ள ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு முன்னரும், இங்கிலாந்துக்கான பயணத்திற்கு முன் ஒப்பந்தத்தை கைச்சாத்திடமாட்டோம் என்று இலங்கை அணி வீரர்கள் தெரிவித்த போதிலும் இறுதியில் சமரசப் பேச்சு நடத்தப்பட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like