கண்டியில் மீண்டும் அபாயம்- 12 பேர் ஒரேநாளில் பலி!

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28970ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் நேற்று மாத்திரம் 118 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்கில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரும். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 97 பேரும் அடங்குகின்றனர்.

கண்டி மாவட்டத்திலேயே இதுவரை அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் உள்ளனர். அதற்கமைய அந்த மாவட்டத்தில் 15525 பேர் இதுவரை இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

நேற்று முடிந்த 24 மணிநேரத்திற்குள் மத்திய மாகாணத்தில் 12 கொரோனா உயிரிழப்புக்களும் பதிவாகியிருக்கின்றன. இவர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May also like