எம்.பியாவதற்கு முன் அமைச்சராகிறார் பஸில்- நாளை அதிரடி!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகத் தலைவராகிய பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்யமுன், அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் காலை 10.03 அளவில், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்தார்.

எனினும் முதலில் அவர் அமைச்சராக ஜனாதிபதிக்கு முன் பதவிப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றம் வந்து எம்.பி பதவியை ஏற்கவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவருக்கு நிதியமைச்சுப் பதவி மாத்திரமே அளிக்கப்படும் எனவும், பொருளாதாரம் மற்றும் உள்விவகார அமைச்சு என்பன அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்திற்குப் பின்னரே அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like