திருகோணமலையில் வெடிப்புச் சம்பவம்-ஒருவர் பலி!

திருகோணமலை – குச்சவெளி ஜாயா நகர் என்கிற பிரதேசத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குச்சவெளி பொலிஸார் இதனைத் தெரிவித்தனர்.

டைனமைட் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரே இவ்வாறு வெடிப்பில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

You May also like