2024இலும் கோட்டாதான் வேட்பாளர்-அறிவித்தது மொட்டு அணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி ஒருவர் இருமுறை போட்டியிடலாம் என்கிறதன் அடிப்படையில் 2024ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவே இருப்பார் என்று அவர் கூறினார்.

You May also like