தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது.

இதுபற்றி இன்று புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தொழில் அமைச்சின் ஆலோசனைத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

அதற்கமைய, தனியார்துறை ஊழியர்களின் மாதாந்த குறைந்த  சம்பளமாக உள்ள 10000 ரூபாவை 12500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தனியார் துறையினரது நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 400 ரூபா தொடக்கம் 500 ரூபாவரை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

You May also like