கிரிக்கெட் நெருக்கடி முடிவுக்கு:12 வீரர்களுக் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் 12 வீரர்கள் தமது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்குபற்றியிருந்த இலங்கை அணி வீரர்கள் 21 பேர் நேற்று பிற்பகல் நாடு திரும்பினர்.

இதனை அடுத்து புதிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, இலங்கை வீரர்களுக்கு நேற்று இரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே 12 வீரர்கள் தமது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வீரர்களுக்கு இன்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுக்கும் இலங்கை அணி வீரர்களை இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like