EXCLUSIVE:தயாசிறி ஜயசேகர இராஜினாமா?

பத்திக் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியற் பிரிவுக் குழுக்கூட்டம் நேற்று மாலை கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் கூடியது.

இதன்போதே சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த முடிவை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதன்போது குறுக்கீடு செய்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தஸநாயக்க, இராஜாங்க அமைச்சர் தயாசிறி, அண்மையில் வெளியிட்ட கருத்தினால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கலங்கம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கிராமப்புறங்களில் மக்கள் நினைக்கின்ற விடயத்தையே தாம் தெரிவித்ததாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

 

You May also like