இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்-அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை அமெரிக்கா மீண்டும் இன்று வெளியிட்டது.

அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் அமெரிக்கா சேர்த்துள்ளது.

You May also like