ஆவா குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது!

முல்லைத்தீவு – கல்லப்பாடு பகுதியில் தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் “ஆவா” குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரையும், யாழில் வைத்து இன்று (8) காலை யாழ் பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 – 24 வயதுக்குட்பட்டவர்களாவர். மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள மணிப்பாய் மற்றும் கோப்பாய் பகுதிகளில் வசிப்பவர்கள்.

நிதி தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அத்துடன், பிரான்சில் வசிக்கும் ஆவா குழுவின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட கட்டளையின் பேரில் சந்தேகநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பொலிசார் மீட்டுள்ளனர்

You May also like